செய்தி விவரங்கள்

காஷ்மீர் சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

காஷ்மீர் சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் கத்துவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாா். நாடு முழவதும் இந்த சம்பவம் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞா் தீபிகா சிங் ராஜவத் மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. காஷ்மீா் மாநில வழக்கறிஞா் சங்க உறுப்பினா்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த கோாிக்கைகளை முன்வைத்து சிறுமியின் வழக்கை கத்துவா நீதிமன்றத்தில் இருந்து சண்டிகா் மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினா் மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞா் தீபிகா சிங் உள்ளிட்டோருக்கு உாிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீா் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணையை சண்டிகா் மாநிலத்திற்கு மாற்றம் செய்யகோாரியது தொடா்பாக மாநில அரசு வருகிற 27ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. தற்போது வழக்கின் விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. ஒருவேலை இந்த வழக்கை விசாரிப்பதில் காவல் துறையினா் தொய்வு ஏற்படுத்தினால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யலாம். அதுவரையில், இந்த வழக்கை மாநில காவல் துறையே விசாரணை செய்யலாம் என்று தொிவித்துள்ள நீதிமன்றம் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு