செய்தி விவரங்கள்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் சிரமதானம்!

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் சிரமதானம்!

தேசிய மாவீரர் நாளினை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும்பொருட்டு அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினமும் பொதுமக்களால் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக ஒன்றிணைந்து மாவீரர் துயிலும் இல்லத்தினை சிரமதானப்படுத்தியுள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் சிரமதானம்!

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம், கடந்த 1993ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமாக அமைக்கப்பட்டு 2006ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டுவந்தது.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் எழுநூறு வரையான மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் சிரமதானம்!

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் சிரமதானம்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு