செய்தி விவரங்கள்

எடப்பாடி ஆட்சியில் அதிருப்தி, ஜெயலலிதா கொலை தான் செய்யப்பட்டார் பன்னீர்செல்வம் .

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்றும் அவிழவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். ஓபிஎஸ் அணியினர் மாவட்டம் தோறும் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தஞ்சையில் ஓபிஎஸ் தலைமையில் அந்த அணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மவுனம் சாதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது என்றும் அவர் சாடினார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழவில்லை என்றும் அவர் அதிர்ப்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு