செய்தி விவரங்கள்

மது குடிப்போருக்கான வயதெல்லையை 23 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு!

மது குடிப்போருக்கான வயதெல்லையை 23 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு!

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2013ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கு மாநில ரீதியில் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் மது விலக்கு அமுல்படுத்தப்பட்டது.

அதன்படி மதுபானக்கடை மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள 730 பார்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், பினராய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்ததும் மதுவிலக்கு நீக்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுவிலக்கை வாபஸ் பெற கேரள அமைச்சரவை முடிவு செய்தது. அதன் படி கடந்த ஜூன் மாதம் கேரளாவில் இருந்த மது விலக்கு வாபஸ் பெறப்பட்டது.

ஆனாலும், தற்போது கேரளாவில் மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயது எல்லையை 23 ஆக அதிகரிக்க குறித்த மாநிலத்தின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மது குடிப்போருக்கான வயதெல்லையை 23 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு