செய்தி விவரங்கள்

லாக்கரில் உள்ள பொருட்கள் காணாமல் போனால் வங்கிகள் பொறுப்பல்ல - ஆர்பிஐ அதிரடி.!

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர் வங்கிகளில் வைக்கப்படும் பொருட்கள் தொடர்பான தனது சந்தேகங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆர்பிஐ உட்பட 19 வங்கிகளிடம் கேட்டார். அதற்கு வங்கிகள் அளித்துள்ள பதில் கேட்போரை அதிரச்செய்துள்ளது.

அதன்படி, வங்கி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைக்கும் நகை உட்பட எந்தப் பொருட்களுக்கும் வங்கி பொறுப்பாகாது எனவும், லாக்கரில் வைக்கப்படும் நகைகளோ அல்லது ஆவணங்கள் உள்ளிட்ட இதர பொருட்களோ காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது எனவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வழியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளன. ஆர்பிஐ உள்ளிட்ட வங்கிகள்.

ஆர்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் இத்தகைய பதில்கள், பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதோடு, தங்களின் வடிக்கையாளர்களிடத்தில் இத்தகைய நிபந்தனைகளை முன்னமே தெரிவிக்கின்றனவா எனவும் கேள்வியெழுப்புகின்றனர்.

நகைகளின் பாதுகாப்பது உள்ளிட்ட எதற்கும் பொறுப்பேற்காத வங்கிளிடம் நம் பொருட்களையும் கொடுத்து அதனை பாதுகாக்க பணமும் ஏன் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்புவதோடு, இதுபோன்ற பொறுப்பற்ற கொள்கைகளை பின்பற்றும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு