செய்தி விவரங்கள்

மரத்தில் கூடாரம் அமைத்து விநோத போராட்டம்

தான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு தனக்கே அதிகாரம் உண்டு எனக் கோரி நபர் ஒருவர் மரத்தின் மீது கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வட்டகொடை மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தின் எம்.ஜி.பந்தல பண்டார என்ற நபரே இன்று மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரதத்துடன் கூடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளை பெற்றிருந்த போது அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர் தெரிவித்துள்ளார்.

மரங்களை வளர்த்து வெட்டுவதற்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி அரசாங்க செயலக பிரிவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பன்ரெண்டாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் ரூபா பணம் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் தனக்கு சொந்தமான மரங்களை தன்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே எம்.ஜி.பந்தல பண்டார என்ற நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில்  உண்ணாவிரதத்துடன் கூடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மரங்களை வளர்த்து அதனை வெட்டும் தருவாயில் தனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் எனவும் இதன் மூலமாக தனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அரசாங்கம் நாம் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளிக்க போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு