செய்தி விவரங்கள்

"இந்து மத தலைவர்கள் தான் எங்கள் முதல் குறிக்கோள்" - அல் கொய்தா எச்சரிக்கை!!

இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் என எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர் என அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், உள்ளூர் இளைஞர் ஒருவரை, ராணுவத்தினர் மனித கேடயமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், காஷ்மீர் சகோதரர்களை வதைக்கும் அதிகாரிகள் தான் தங்களது குறி என அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்து அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துணைக்கண்டத்தின் மீதான முஜாகிதீன் நடவடிக்கைகள் குறித்து அனைத்து தகவல்கள் உள்ளது. அந்த ஆவணத்தில் அவர்கள் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது "இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் என எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர்.
எங்கள் காஷ்மீர் சகோதரர்களை கொன்ற ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பழிவாங்குவோம்" என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு