செய்தி விவரங்கள்

ஜனாதிபதி தலைமையில் ஹைலண்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா

 

நுவரெலியா - ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா ஹட்டன் டி.கோ.டபில்யூ கலாசார மண்ணடபத்தில் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்  த ஜலண்டர் எனும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன், நுவரெலியா  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஆறுமுகம் தொண்டமான்,  முத்து சிவலிங்கம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன்  மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு