செய்தி விவரங்கள்

திருகோணமலையில் விவசாயிகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை!

திருகோணமலையில் விவசாயிகளுக்கு நேர்ந்த பரிதாப நிலை!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்து வரும் அடைமழையால் நெல் அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் அறுவடையை நிறைவு செய்தும் இன்னுமொரு பகுதியினர் மழையை எதிர்பார்த்தும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு பதிவான மழை வீழ்ச்சியானது ஒரு சில விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்ததோடு மறுபுறம் அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எனினும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளின் வயல் நிலங்கள் வறட்சி காரணமாக கைவிடப்பட்டும் காணப்படுகின்றன.

இதேவேளை வறட்சி மற்றும் மழைப் பொழிவு என்பவற்றால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை உரிய உத்தியோகத்தர்கள் சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு