செய்தி விவரங்கள்

நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த தமிழக அரசு பள்ளி சகோதரிகள்!!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' பொது நுழைவுத்தேர்வு, சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாதென பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டதோடு, புதிதாக தேர்வு நடத்தவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிபிஎஸ்சி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகள் குறித்து பிறப்பித்த உத்தரவினை நீக்கியதோடு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட்டது.

நீட் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது வேதனையான விஷயம்தான். ரேங்க் பட்டியலில் இல்லாவிட்டாலும் நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இதில் நீட் தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர். வந்தவாசியைச் சேர்ந்த அன்புபாரதி, நிலாபாரதி சகோதரிகள். வந்தவாசி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அன்பு பாரதியும் நிலா பாரதியும் பயின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அன்பு பாரதி 1165 மதிப்பெண்களும், நிலாபாரதி 1169 மதிபெண்களும் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் நீட் தேர்வுக்கு ஆயுத்தமாகியுள்ளனர். நீட் தேர்வில் அன்பு பாரதி 151 மதிப்பெண்களும் நிலாபாரதி 146 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு