செய்தி விவரங்கள்

நாடு திரும்பிய கோட்டாவிற்கு வலை வீச்சு - தோல்வியில் முடிந்தது

கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய கோட்டாவிற்கு வலை வீச்சு - தோல்வியில்  முடிந்தது

இதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, கோட்டாபய ராஜபக்ஸவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல்  செய்த அடிப்படை உரிமை மீறல் மீதான விசாரணைகள்  நிறைவடையும் வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு