செய்தி விவரங்கள்

தொழுகையில் ஈடுபட்டோர் மீது தாக்குதல்; ஒருவர் காயம், வவுனியாவில் சம்பவம்

வவுனியா - சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அந்த இடத்திற்குச் சென்ற பிறிதொரு முஸ்லிம் குழுவினர் அவ்வாறு வழிபடுவது தவறு எனவும் அவ் வழிபாட்டை நிறுத்துமாறு கோரியும் தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இறும்பு கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா, உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு