செய்தி விவரங்கள்

வடமராட்சி கட்டைக்காட்டில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

வடமராட்சி கட்டைக்காட்டில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

வடமராட்சி கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தேவதாசன் யூட்அலக்சன் என்ற மீனவா் கடந்த 09 ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் மறுநாள் 10 ஆம் திகதி அவர் பயணித்த படகு முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது.

இந்நிலையில் அவரது சடலம் இன்று (13.03.2018) செவ்வாய் கிழமை காலையில் வடமராட்சி கட்டடைக்காட்டு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

தற்போது உடலம் கட்டைக்காடு பொது மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு