செய்தி விவரங்கள்

ஒலுவில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மாயம் :தேடும் பணி தீவிரம்!

ஒலுவில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மாயம் :தேடும் பணி தீவிரம்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை ஒலுவில் பிரதேச கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(07) அதிகாலை இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேசத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றபோது குறித்த படகு கவிழந்துள்ளது.

ஒலுவில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மாயம் :தேடும் பணி தீவிரம்!

குறித்த சம்பவத்திர் ஒலுவில் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த அபுசாலி முகம்மது இப்றாகிம் (வயது-33)  என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதேவேளை சீரற்ற காலநிலை காhரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில்  உள்ள சகல மீனவர்களிற்கும் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு