செய்தி விவரங்கள்

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம்(16-04-2018) காலை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

மாநகர மேயர் தி.சரவணபவன் முன்னிலையில் ஆரம்பமாகிய மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வி.தவராஜாவின் முன்வைப்பினையடுத்து அன்னை பூபதிக்கு மூன்று நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

தமிழர்களுடைய பிரச்சினைத் தீர்வுக்காக உண்ணா நோம்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியில் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் மாநகர சபை அமர்வு இல்லை என்ற அடிப்படையில் இன்றைய அமர்வில் 3 நிமிட இஞ்சலி செலுத்த சபை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வி.தவராஜாவின் கேட்டுக் கொண்டார்.

இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அஞ்சலியை அடுத்து சபை அமர்வுகள் நிகழ்ச்சி நிரலின் படி நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு