செய்தி விவரங்கள்

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழனுக்கே!

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழனுக்கே!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழ் கட்சிகளுடன் இணைந்தே ஆட்சி அமைக்கும் தவிசாளர் பதவி தமிழனுக்கே பங்காளிக் கட்சிக்கு உப தவிசாளர் பதவி வழங்கப்படும் இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு கொம்மாதுறை அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தைப் பொறுத்தவரை தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம், தவிசாளர் பதவி தமிழருக்கே உரியது இது தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்களுடன் பேசியுள்ளோம். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

 ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தென்னிலங்கையில் வீழ்ச்சி கண்டிருந்தாலும் மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதியை நம்பி வாக்களித்துள்ளார்கள்.

எமது மக்களுக்கு கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக வாழ்துச் செய்தி தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களிடம் நேரடியாக வந்து எந்தவித வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்தில்லை.

ஆனால் முஸ்லிம் பிரதேசங்களுக்கு வந்து அபிவிருத்திகளை முன்னெடுக்கிறார்கள். தமிழ் மக்கள் சார்பில் பேசுவதற்கு ஆளும் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாணசபை உறுப்பினரோ இல்லை. எனவே மட்டக்களப்புக்கு தேசிய பட்டியலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தரவேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு