செய்தி விவரங்கள்

அதிவேக நெடுஞ்சாலையில் மெதுவாக செல்லுங்கள் – ஆப்பு தயார்

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வேக அளவீட்டு இயந்திரக்கட்டமைப்பு இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் மெதுவாக செல்லுங்கள் – ஆப்பு  தயார்

அதிவேக நெடுஞ்சாலையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் 27 சதவீதமானவை அதிக வேகத்தினால் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த இயந்திர கட்டமைப்பின் மூலம் வாகனத்தின் வேகத்தை கண்காணிப்பதுடன் வேக வரையறையை மீறும் வாகனங்களின் புகைப்படங்கள் உடனடியாக ரெப் கணனியின் ஊடாக பிரதி பண்ணப்படும்.

இவற்றுடன் வாகன இலக்கம், கண்காணிக்கப்பட்ட நேரம், அதிவேகம் தொடர்பான தகவல்களும் அச்சிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு