செய்தி விவரங்கள்

பாகுபலி பாணியில் மான் குட்டியை காப்பாற்றிய சிறுவன்!!

பங்களாதேஸில் பெய்து வரும் கடும் மழையால் கங்கைளின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன. இதன் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மான் குட்டியொன்றை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஸின் நொக்காலி கங்கையில் இழுத்துச் செல்லப்பட்ட மான் குட்டியையே அந்த இளைஞர் காப்பாற்றியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞன் தனது உயிரை பணயம் வைத்து எவ்வித உதவிகளும் இன்றி அந்த மான் குட்டியை காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார். இந்த காட்சி பாகுபலி படத்தில் குழந்தையை தண்ணீருக்குள் கையில் பிடித்தவாறு இருக்கும் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. இதற்கு சமூகவலைத்ததில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு