செய்தி விவரங்கள்

கபளீகரம் செய்யப்பட்ட காணிகள்;சுவாமிநாதனுடன் ஸ்ரீதரன் மோதல்

கபளீகரம் செய்யப்பட்ட காணிகள்;சுவாமிநாதனுடன் ஸ்ரீதரன் மோதல்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் இரணைதீவு பகுதியிலுள்ள மக்களின் காணி விவகாரம் தொடர்பில் இராணுவத்துனட கலந்துரையாடி தீர்வு வழங்குவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.

இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக இவ்விரண்டு பகுதிகளிலும் இராணுவம் வசமிருக்கும் மக்கள் காணிகளை விடுவிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இன்றைய தினமும் அதே வாக்குறுதியை வழங்கினார்.

மீள்குடியேற்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன், கேப்பாபுலவு மற்றும் இரணைதீவு மக்களின் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்பதை மீள்குடியேற்ற அமைச்சரிடம் வினவினார்.

இதன்போது அமைச்சர் சுவாமிநாதனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கும் இடையில் ஆரோக்கியமான விவாதம் இடம்பெற்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு