செய்தி விவரங்கள்

18 வருடங்களின் பின் முகமாலை தேவாலய திருவிழா ஆரம்பம்

முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

நாளை மறுதினம் மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி இடம்பெற்று பின்னர் 17.09.2017 காலை 6.30 மணிக்கு திருநாள் திருப்பலி நடைபெற்று அன்னையின் ஆசிர்வாதம் இடம்பெறவுள்ளது.

முகமாலை கடந்த காலத்தில் கடும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாகவுள்ளது. குறித்த பிரதேசத்தில் அதிகளவு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதோடு, தற்போது கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு