செய்தி விவரங்கள்

சாக்லெட் நிற பசுக்கள் சாக்லேட் பால் கொடுக்கும் - அமெரிக்கா ஆய்வு!

சாக்லெட் போன்ற பழுப்பு நிறத்தில் இருக்கும் பசுமாடுகள் சாக்லேட் பால் கொடுக்கும் என்று 7% அமெரிக்க இளைஞர்கள் நம்பிக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பால் நிறுவனம் ஒன்று அன்மையில் நூதன ஆய்வு ஒன்றை நடத்தியது.

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சாக்லேட் பால் எதிலிருந்து கிடைக்கிறது என்று கேட்கப்பட்டது. இதற்கு 7% பேர் சாக்லெட் நிறத்தில் இருக்கும் பசுக்கள் எல்லாம் சாக்லெட் பால் கறக்கும் மாடுகள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் வெகுளித்தனமாக கூறியுள்ளனர்.

வெள்ளை நிறத்தில் இருக்கும் பசு வெள்ளை நிறத்தில் பால் கொடுப்பது போலத்தான் இதுவும் என்று விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார்கள் அவர்கள். ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 50% பேர் சாக்லேட் பால் எங்கிருந்து வருகிறது என்றே எங்களுக்குத் தெரியாது என்று எஸ்கேப் ஆகிவிட்டார்களாம்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு