செய்தி விவரங்கள்

முன்னாள் போராளிகளை மீண்டும் புனர்வாழ்வளிக்க வேண்டுமாம் கூறுகிறார் கருணா

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல காலமாக மக்களை ஏமாற்றிவருவதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே தாம் பலமான ஒரு மாற்றுக் கட்சி அவசியம் என்ற நோக்கில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்ட மக்கள் சந்திப்பு நேற்று திருகோணமலையில் அமைந்துள்ள செவிப்புலன் வலுவுற்றோர் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், கட்சியின் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ. மற்றும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிறந்தமுறையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும், யுத்தத்தில் கணவனை இழந்த குடும்பத் தலைவிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மைத்திரி ரணில் அரசாங்கம் ஊழலை ஒளிக்கவேண்டும் என்றே ஆட்சிக்கு வந்தது எனினும் ஊழல் ஒழிக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தினார்கள்.

ஆனால் இதுவரை அந்த குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறிருக்க தற்போது வடமாகாண சபையையும் ஊழல் விட்டுவைக்கவில்லை என தெரிவித்தார்

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும் அதன் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஒன்றிணைத்து பல செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியும் என கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு