செய்தி விவரங்கள்

மத்திய மாகாண விவசாய அமைச்சரின் தேர்தல் வெற்றி உரை!

மத்திய மாகாண விவசாய அமைச்சரின் தேர்தல் வெற்றி உரை!


மத்திய மாகாண விவசாய அமைச்சர் உள்ளுராட்சி தேர்தல் குறித்து நேற்று ஊடக சந்திப்பில் உரையாற்றியுள்ளார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை வென்றெடுத்த பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு மட்டுமே உண்டு. மக்களை தூண்டிவிட்டு காலத்தை கழிக்காமல் அரசியல் சாணக்கியத்தின் மூலம் பல சாதனைகளை புரிந்து மலையக சமூகத்தை தலைநிமிர வைத்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான். தான் பேசி காலத்தை கழிக்காமல் தனது சாணக்கியத்தின் மூலம் மலையக சமூகத்தை மானமுள்ள சமூகமாக மாற்றியமைத்திருக்கிறார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேசியது குறைவு சாதித்தது அதிகம் என மத்திய மாகண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பொன்றின்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
மலையக மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும், எமது பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மீதும்  வைத்துள்ள நம்பிக்கையை நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது. மலையகத்தில் தற்போது தம்மை ஏக பிரதிநிதிகளாக நினைத்து கற்பனையில் காலத்தை கழிக்கும் மலையக அமைச்சர்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய கட்சிகளின் முதுகிலேறி சவாரி செய்து வெற்றி பெற்று விடலாம் என்ற கனவில் இருந்தனர். இக்கனவு பகல் கனவாக மாறிவிட்டது. கடந்த ஒரு வருட  காலமாக இவர்கள் பேசியே காலத்தை கடத்தி விட்டனர். இதனை மக்களும் நன்கு அறிவார்கள்.

நடந்து முடிந்த இத்தேர்தல் மூலம் கிராம மட்டத்தில் மக்களாட்சியை மலரசெய்ய வேண்டும் உள்ளுராட்சி மன்றங்கள் மக்களின் அன்றாட மற்றும் அத்தியாவசியமான அடிப்படை பிரச்சினைகளை கையாழும் நிறுவனங்களாக காணப்படுவதால், பிரச்சினைகளின் தீர்வுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பு அவசியமானதாகும்.

எமது மக்களின் எதிர்பார்பிற்கிணங்க அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக இருக்கின்றது. மக்களுக்கு அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் போது கட்சிபேதங்களை கடந்து சேவைசெய்ய வேண்டும். அப்படி செய்து வந்ததனாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்து நிலைத்து நிற்கிறது.

அரசாங்க நிதியில் தோட்டங்களை அபிவிருத்தி செய்யமுடியாது என்ற விதியை உடைத்தெரிந்து அரசாங்க நிதியை கொண்டு  பாதைகள், பாலங்கள், விளையாட்டு மைதானங்கள், பாலர் பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், பிரஜாசக்தி மையங்கள், குடி நீர் வசதிகள், கோவில்கள், தேவாலயங்கள் போன்ற பல அபிவிருத்தி வேலைதிட்டங்களை மேற்கொண்ட பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரசையே சாரும்.இலங்கை தொழிலாளர் காங்கிரசஸினால் மட்டுமே மலையக மக்களுக்கு தெளிவான தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை மலையக மக்கள் இன்று நிரூபித்திருக்கின்றார்கள் என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு