செய்தி விவரங்கள்

பிரதமர் வீட்டின் முன் தூக்கு கயிறு போராட்டம் ; அய்யாக்கண்ணு அறிவிப்பு.!

பிரதமர் வீட்டின் முன் தூக்கு கயிறு போராட்டம் ; அய்யாக்கண்ணு அறிவிப்பு.!

பெரம்பலூரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை, விவசாயி அய்யாக்கண்ணு பொதுமக்களிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, "மத்திய அரசு வேண்டும் என்றே தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து தரப்பினரும், அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் போது சில கட்சிகள் இதை திசை திருப்ப முயலுகிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரிடம் முதலிலேயே மனுக்கொடுத்து நிர்பந்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்தி விட்டனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து தமிழகத்துக்குத் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மெரினாவில் 90 நாள்களுக்குப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். 24 மணி நேரமும் அங்கேயே இருந்து போராடுவோம். ஒருவேளை அனுமதி கொடுக்கவில்லையென்றால் பிரதமர் வீட்டுக்குச் சென்று தூக்குக்கயிறு போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு