செய்தி விவரங்கள்

இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிய அரசு – கம்னியூஸ்ட்

ஸ்ரீலங்காவில் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் தவறிவிட்டதாக இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மோகன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிய அரசு – கம்னியூஸ்ட்

இதேவேளை, நாட்டின் சிறுபான்மை மக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளின் மிக முக்கிய பிரச்சினையாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை மாறி வருவதாகவும் மோகன் சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் அண்மைக்காலமாக சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் இடம்பெற்றிருந்தன.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை கம்னியூஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா – ஹட்டனில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் மோகன் சுப்பிரமணியம் இதனை தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு மூவின மக்களும் போராடிய போதிலும், அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலையிலேயே மக்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனிப்பட்டவர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கு அரசாங்கம் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு