செய்தி விவரங்கள்

உருளைக்கிழங்கில் செய்த 111 மீட்டர் நீளம் கொண்ட கேக் - ஸ்ரீலங்காவில் சாதனை!

நுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் எடை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் ஒன்றை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வெட்டிவைத்தாா்.

நேற்றையதினம் (15.04.2018) கேக் வெட்டி அதனை உல்லாச பிரயாணிகளின் பார்வைக்கு திறந்து வைத்தார்.

111 மீட்டர் நீளம் கொண்ட இந்த கேக் உருளைக்கிழங்கால் தயாரிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும் என இதனை தயாரித்த தலைமை சமையல்காரர் விஜயராஜ் ஜயரட்ண தெரிவிக்கின்றார்.

இதனை தயாரிக்க 100 கிலோ உருளைக்கிழங்கு,900 முட்டைகள்,40கிலோ கொக்கோ கிறீம்,70மப சீனி கோதுமை மா,பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான செலவு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாகும் செலவானதுடன் 50 சமையற்காரர்கள் இதனை மூன்று நாட்கள் தயாரித்து நிறைவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ நாடாவை வெட்டி இந்த கேக்கினை உல்லாச பிரயாணிகளின் பார்வைக்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன,கிரேன் விருந்தகத்தின் முகாமையாளர் ரிபான் ரசீன்,பராமரிப்பு முகாமையாளர் எஸ்.அன்பழகன் உட்பட பலா் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு