செய்தி விவரங்கள்

பாடசாலை மாணவர்களை வழிமறித்து மிரட்டியதில் மாணவர்கள் மயக்கம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்கெலிய கிலன்டில் லங்கா பிரிவில் இனந்தெரியாத நபர்கள் மிரட்டியதில் மயக்கமுற்று பாடசாலை மாணவிகள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் இருவர் பாடசாலைக்கு சென்ற மாணவர்களை வழியில் இடை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டியதால் அந்த மாணவிகள் மயக்கமுற்ற நிலையில் பிரதேச மக்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த சம்பவத்தில் 8 மாணவிகளுடன் 3 மாணவர்கள் உட்பட 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலிய பிரவுன்ஸ்வீக் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் 5 முதல் தரம் 10 வரையில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கறுப்பு நிற ஆடை அணிந்த இருவரே தம்மை இவ்வாறு கத்தியைக் காட்டி மிரட்டியதாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு