செய்தி விவரங்கள்

Bell நிறுவனத்தை தாக்கியதா ரான்சம்வேர் வைரஸ்?? கனடா Bell நிறுவனம் விளக்கம்

கனடாவின் Bell நிறுவனம் கடந்த மே 15 ம் தேதி தனது வாடிக்கையாளர்களின் தகவல்கள் சட்டவிரோதமாக ஊடுருவப்பட்டதாக (Hack) அறிவித்திருந்தது. அதை பற்றி மேலும் பல தகவல்களை பகிர்ந்துள்ளது.

அந்த ஊடுருவலில் தோராயமாக 1.9 மில்லியன் மின்னஞ்சல் முகவரியும் தோராயமாக 1700 வாடிக்கையாளர்களின் பெயர்களும் தொடர்பு எண்ணும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவதாகவும், ஆனால் வேறு எந்த கடவு சொற்களோ முக்கிய தகவல்களோ திருடப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலைக்கு தள்ள பட்டமைக்கு வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டு, இதில் பாதிக்கபட்டவர்கள் அனைவரையும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மே 16 மாலைக்குள் தொடர்பு கொள்ளப்படாத வாடிக்கையாளர்கள் இதில் பாதிப்படையாதவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அரசாங்கம் மற்றும் சட்ட அமலாக்க பிரிவுடன் தீவிர ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், சமீப நாட்களாக உலகையே அச்சுறுத்தி வரும் வான்னாகிரை தீம்பொருள் தாக்குதல் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இது மிக சிறிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும், இவ்வாறான மோசடிகளில் இருந்து காத்துக்கொள்ள சில வழிகளையும் குறிப்பிட்டுள்ளது.

  • Bell நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களையோ கிரெடிட் கார்டு தகவல்களையோ எக்காரணத்திற்கும் கேட்காது என்றும்
  • வேண்டப்படாத மற்றும் சந்தேகத்திற்கிடமாக கேட்கப்படும் தனிப்பட்ட தகவல்களையும், அவ்வாறான தகவல்களை கேட்க கூடிய வலையத்தளங்கள் பற்றியும் எச்சரிக்கையாக இருக்குமாறும்
  • உங்களுக்கு அறிமுகமில்லாத நம்பக தன்மையில்லாத இணைப்புகள் மற்றும் பதிவிறக்கங்களையும் தவிர்க்கவும் என தெரிவித்துள்ளது.

மேலும் தங்களது கடவு சொற்களையும் பாதுகாப்புக்கான கேள்விகளையும் அடிக்கடி மாற்றி அமைப்பது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றம் தடுப்பு குறித்த மேலும் தகவல்களுக்கு RCMP வலைத்தளத்தை பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ள Bell.ca/SecurityAlert என்ற வலைத்தளத்தை பார்க்கவும் அல்லது 310 என்ற எண்ணில் தங்களை தொடர்புகொள்ளவும் என்று Bell நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு