செய்தி விவரங்கள்

குழியிலிருந்து பெறப்படும் நீரைப் பயன்படுத்திவரும் யானைகட்டியவெளி கிராம மக்கள்!

குழியிலிருந்து பெறப்படும் நீரைப் பயன்படுத்திவரும் யானைகட்டியவெளி கிராம மக்கள்!


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதயில் அமைந்துள்ள யானைகட்டியவெளி கிராம மக்கள் சுத்தமான குடிநீரின்றி அல்லலுறுவதாகத் கவலை தெரிவிக்கின்றனர்.

குழியிலிருந்து பெறப்படும் நீரைப் பயன்படுத்திவரும் யானைகட்டியவெளி கிராம மக்கள்!

மிக நீண்ட காலமாகவிருந்து சுத்தமான குடிநீரின்றி தாம் பெரும் இன்னலுற்றுவருவதோடு, பல சுகாதாரப் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருவததாக ஆனைகட்சியவெளி கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இக்கிராமத்தின் ஒரு பகுதிக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ள இந்நிலையில், ஏனைய பகுதிகளுக்கு இதுவரையில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படாமையினால், குடியிருக்கும் இடங்களில் குழிகளை வெட்டிக் கொண்டு அதிலிருந்து வரும் நீரைப் பெற்று வருவதாகவும், அக்குழிகளிலிருந்து பெறப்படும் நீரைப் பருமாறுவதற்கும், குடிநீரைப் பெறுவதற்கு மிக நீண்ட தூரம் சென்று தாம் பெறுவதாகவும் யானைகட்டியவெளி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

குழியிலிருந்து பெறப்படும் நீரைப் பயன்படுத்திவரும் யானைகட்டியவெளி கிராம மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக் கிராமமாக யானைகட்டியவெளிக் கிராமம் அமைந்திருந்தாலும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறைக் காரியாலயம்தான் அப்பகுதிகளெல்லம் குழாய் மூலம் குடிநீர் வழங்கி வருகின்ற இந்நிலையில், அம்பாறையிலுள்ள அக்காரியாலயத்திற்கு அக்கிராம மக்கள் பலமுறை இவ்விடயம் தொடர்பில் தெரிவித்தும், இன்னும் அவர்களுக்குரிய சுத்தமான குடிநீர் தேவை என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.
குழிகளிலிருந்து பெறப்படும் நீரைப் பருமாறுவதனால் வயிற்றுவலி, வாந்திபேதி போன்ற நோய்களுக்கு தாம் உட்படுவதாகவும், சிறுவர்கள், குழந்தைகளுக்கு இக்குழிகள் பாதுகாப்பின்மையாகக் காணப்படுவதாகவும் அக்கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குழியிலிருந்து பெறப்படும் நீரைப் பயன்படுத்திவரும் யானைகட்டியவெளி கிராம மக்கள்!

இந்நிலையில் யானைகட்டியவெளி கிராமத்தின் ஒரு பகுதிக்கு தற்போது குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிக்கு இவ்வருடத்திற்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு