செய்தி விவரங்கள்

ஆதீவாசிகளுக்கான அடிப்டை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின், அழிக்கம்பை கிராமத்தில் உள்ள ஆதீவாசி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு, இந்த வருடத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆதீவாசிகளுக்கான அடிப்டை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்!

நேற்று(07.01.2018) நண்பகல், அம்பாறை திருக்கோவில் புனித சூசையப்பர் தேவாலயத்தின், ஒகஸிலியம் ஆங்கில கல்வி மற்றும் கனணி நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

அழிக்கம்பை கிராமத்தில், பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ள அதேவேளை, இவ்வாண்டு, அங்கு வாழும் மக்களுக்கான வீடுகள்,குடிநீர் வசதிகள் மற்றும் ஏனைய அபிவிருத்திகளையும் செய்து கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளேன். அத்துடன் அழிக்கம்பை கிராமத்தில் சுமார் 3இலட்சம் ரூபாய் செலவில், முன்பள்ளி நிலையம் ஒன்றினையும் திறந்து கொடுத்துள்ளேன்.

இதேவேளை, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கனணி,மற்றும் ஆங்கில கல்வி அறிவினை மேம்படுத்தம் நோக்கில், இவ் நிலையத்திற்கு தேவையான கனணிகளை பெற்றுத் தருவதுடன், எமது எதிர்கால சந்ததியினர் சிறப்பாக வாழ்வதற்கான என்னால் முடிந்த உதவிகளை வழங்குவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு