செய்தி விவரங்கள்

டோக்கியோவில் பொலிஸார் மீது தாக்குதல்: ஸ்ரீலங்கா நாட்டவர்கள் காரணமா?

டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜப்பானி பொலிஸார் சிலர் ஸ்ரீலங்காவை சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் யொயோகி பூங்காவில் ஸ்ரீலங்கா தூதரகம் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த மோதல்  சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜப்பானிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, மோதலில் ஈடுபட்டவர்கள் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரகத்திடம் ஊடகமொன்று கேள்வியெழுப்பிய போது, அதற்கான பதில் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு, ஸ்ரீலங்கா தூதரகத்திடம் கலந்துரையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு