செய்தி விவரங்கள்

நாடளாவிய ரீதியில் அம்பியுலன்ஸ் சாரதிகள் வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அம்பியுலன்ஸ் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுகாதார சேவை சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளனர்.

பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இலங்கை சுகாதார சேவை சாரதிகள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சுகாதார திணைக்கள சாரதிகள் 11 பேருக்கு வேறு திணைக்களகங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யவேண்டும்.

சகல மாகாணங்களிலும் சுகாதார திணைக்கள சாரதிகள் அந்த  திணைக்களங்களில் மாத்திரமே பணியாற்ற அனுமதிக்கப்படவேண்டும்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அமைவாக அமைச்சரின் உத்தரவை மாகாண சுகாதாரத் திணைக்களங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாணத்தை பொறுத்த வரை வவுனியா மாவட்டத்தில் 49 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 32 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 63 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 39 பேரும், மன்னார் மாவட்டத்தில் 39 பேரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்த நாட்களில் அவசர சேவைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய மாகாணத்திலும் அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நோயாளர்களின் நலன் கருதி அவசர சேவைக்கென தலா 1 சாரதிகள் மாத்திரம் கடமையில் ஈடுபட்டுள்ளனர் .

எனினும் ஒரு அம்பியூலன்ஸ் வண்டியை கொண்ட வைத்தியசாலைகளில் சாரதிகள் கடமையில் ஈடுபடவில்லைஎன குறிப்பிடப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு