செய்தி விவரங்கள்

அம்பாறை சாந்திபுரம் கிராமத்தினுள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்!

அம்பாறை சாந்திபுரம் கிராமத்தினுள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்!


அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தினுள் காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன.

அம்பாறை சாந்திபுரம் கிராமத்தினுள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தினுள் அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் தேனீர் கடை மற்றும் அருகில் இருந்த வீடுகளை உடைத்து நாசம் செய்துள்ளதுடன் கடைக்குள் இருந்த உணவுப் பொருட்களையும் இழுத்துச் சென்றுள்ளதோடு, மேட்டு நிலப்பயிர்களையும் துவம்சம் செய்துள்ளது.அதிகாலை கிராமத்தில் உட்புகுந்த யானை அங்கிருந்த கடையினை உடைத்த நிலையில் அங்கிருந்த பிரதேச மக்கள் ஒன்றினைந்து விரட்டுவதற்காக முயற்சித்தனர். இருந்தபோதும் காலைவரை அக்கிராமத்தை விட்டு செல்லாத யானை கடை வீடு பயிர்கள் என அனைத்தையும் நாசம் செய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அம்பாறை சாந்திபுரம் கிராமத்தினுள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்!

பலவருடங்களாக தாம் இவ்வாறான துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் ஆரம்பத்தில் 72 குடும்பங்கள் இங்கு வாழ்ந்தாகவும், யானை அச்சுறுத்தலால் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இங்கு வாழ்கின்றவர்கள் உயிர்களை கையில் பிடித்த வண்ணம் வாழ்வதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர். தமது கிராமத்தில் அமைக்கப்பட்ட இருபத்தி ஒரு வீடுகளும் அவ்வப்போது யானையினால் உடைக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் பாதுகாப்பு கருதி  மலையில் வீடு அமைத்துள்ளதையும், ஆனாலும் யானை தொல்லைக்கான தீர்வினை அரசாங்கமோ, அதிகாரிகளோ பெற்றுத்தரவில்லை எனவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.

அம்பாறை சாந்திபுரம் கிராமத்தினுள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்!

அம்பாறை மாவட்டத்தில் அன்மைக்காலத்தில் யானைகளின் தொல்லை குறைவடைந்த நிலையில், வேளாண்மை அறுவடையின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கடந்த காலத்தில் பல உயிர்களும் யானை தாக்குதலால் காவு கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமது கிராமம் சாந்தியை இழந்து தவிப்பதாகவும் கூறுகின்றனர். வாக்குகள் பெறுவதில் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகள் மக்களின் வாக்குளை பெற்று வெற்றியடைவதாகவும், இறுதியில் வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதாகவும், இதன் மூலம் மக்கள் எதிர்பார்த்த விடயங்களில் தோல்வியடைவதாகவும் தெரிவித்தனர்.

ஆகவே அரசியல்வாதிகளும், அரசாங்கமும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் விரைவான நடவடிக்கை எடுத்து தங்களது குடியிருப்புக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை தம்மை பாதுகாக்கும் பொருட்டு பாதுகப்பற்ற மின்சார வேலிகள் மக்களால் அமைக்கப்பட்டுள்ளதையும், அதனையும் உடைத்து யானை உட்புகுந்துள்ளமையையும் இங்கு காணமுடிந்தது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு