செய்தி விவரங்கள்

யூ.எஸ்.எயிட் முகவரமைப்பின் பணிப்பாளராக ரீட் ஜே ஏஸ்கிலிமன் நியமிப்பு

யூ.எஸ்.எயிட் முகவரமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளராக ரீட் ஜே ஏஸ்கிலிமன் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

யூ.எஸ்.எயிட் முகவரமைப்பின் பணிப்பாளராக ரீட் ஜே ஏஸ்கிலிமன் நியமிப்பு

யூ.எஸ்.எயிட் இன் அபிவிருத்தி உதவிகளை நிர்வகிப்பதில் ஏஸ்கிலிமன்க்கு உள்ள வலுவான அனுபவங்கள் காரணமாக இலங்கை மற்றும் மாலைதீவு மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பினால் தற்போது புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக 4.5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1956ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவியாக அமெரிக்க அரசாங்கம் 2 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இந்த உதவிகள் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி சீர்திருத்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகளில் இருந்து மீளுதல் போன்ற விடயங்களில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் மாலைதீவு மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தான் பெருமை அடைவதாக ரீட் ஜே ஏஸ்கிலிமன் குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு