செய்தி விவரங்கள்

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு  ரிப்பர் ரக வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

முன்னாள் சென்றுகொண்டிருந்த ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால்  மணல் ஏற்றி சென்ற ரிப்பர்  மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து  தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

 

இதேவேளை, இன்று அதிகாலை  தம்புள்ளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மரக்கறி லொறி ஒன்று பூநகரியில் வீதியில் வேககட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு