செய்தி விவரங்கள்

ஹற்றனில் பத்து அடி பள்ளத்தில் பாய்ந்த காா் - சாரதி கைது!

ஹற்றனில் பத்து அடி பள்ளத்தில் பாய்ந்த காா் - சாரதி கைது!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நகரில் இருந்து ஹற்றன் பகுதியில் பயணித்த காா் வண்டி ஒன்று கிழங்கன் கெந்தகொலை பகுதியில் வீதியை விட்டு விலகி பத்து அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (14) புதன்கிழமை மாலை 04.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

ஹற்றனில் பத்து அடி பள்ளத்தில் பாய்ந்த காா் - சாரதி கைது!

குறித்த கார் வண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாகவும் அதிக வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த கார் வண்டி ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியை விட்டு விலகி கெந்தகொலை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சாரதி கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட கார் வண்டியின் சாரதி நாளை(15) வியாழக்கிழமை ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக நோர்வூட் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹற்றனில் பத்து அடி பள்ளத்தில் பாய்ந்த காா் - சாரதி கைது!

ஹற்றனில் பத்து அடி பள்ளத்தில் பாய்ந்த காா் - சாரதி கைது!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு