செய்தி விவரங்கள்

வீட்டில் தனிமையில் இருந்த 18 வயது பெண் உயிருடன் எரித்து கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் தன்னை கற்பழிக்க முயன்றவனிடம் இருந்து தப்பிக்க முயன்ற பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தின் ஷாஹி கணேஷ்பூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் நேற்று தனது வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் தனது செல்போனை 'சார்ஜ்' செய்வதற்காக சென்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த இளம்பெண் தனியாக இருப்பதை கண்டதும் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் கற்பழிக்கவும் முயன்றுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் இருந்து விடுபடுவதற்காக கூச்சலிட்டபடி வெளியே தப்பிச் செல்ல முயன்ற குறித்த இளம்பெண்ணின் உடலின் மீது மண்ணெண்ணயை ஊற்றி தீ மூட்டிய குறித்த நபர் அங்கிருந்து தப்பிசென்றுள்ளார்.

பற்றி எரியும் தீயுடன் பயங்கரமாக அலறிய பெண்ணை அவரது பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி  குறித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை கைதுசெய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு