செய்தி விவரங்கள்

உலக புகழில் உயர்ந்து நிற்கும் New Jersey வெங்கடேஸ்வரர் திருக்கோவில்!

தமிழனும் கோவில்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தது எனலாம். தான் வணங்கும் தெய்வத்திற்கு இருப்பிடமாய் ஒரு இடத்தை ஒதுக்கி, அதை கோவில் என்றழைத்து, அதை வழிபாட்டு தலமாக போற்றி வருகிறோம். இறை நம்பிக்கையுடையோர் தங்கள் மதத்தின் வழிக்காட்டலின்படி அவரவர்களுடைய தெய்வங்களைத் தொழுமிடம் தான் கோவில் ஆனது.

'கோ' எனில் கடவுள் அல்லது அரசன் என்றும், 'இல்' என்றால் குடியிருக்குமிடம் என்றும் பொருள்பட்டு கோவில் என்றழைக்கபடுகிறது.

உலகில் மிக பெரிய, சிறந்த கோவில்களை நிறுவியவன் என மார் தட்டிக்கொள்ளும் அளவிற்கு அறிய, அபூர்வ வியக்கத்தக்க பல வழிபாடு தளங்களை அமைத்துள்ளான் தமிழன். இதற்கு, தஞ்சை பெரியகோவில், ஸ்ரீரங்கம், அக்ஷர்தம், நடராஜர் கோவில், அண்ணாமலையார் கோவில் என எக்கச்சக்க சான்றுகளை கூறலாம்.

உலகளாவிய அளவில் கலை, கட்டட சிறப்புகளில் தலைசிறந்து விளங்கும் தமிழர்கள், அமெரிக்கா- நியூ ஜெர்சி- மான்ரோ நகரில் பிரமாண்டமான பாலாஜி கோவில் கட்டியுள்ளனர். இந்த கோயில் உலகளவில் பல சிறப்புகளையும், வியக்கத்தக்க பல ஆச்சரியங்களையும் கொண்டுள்ளது.

இந்த கோயில் 125 ஏக்கர் பரப்பில் 1000 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2000க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் கொண்டு கோவில் முழுவது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா, இத்தாலி நாட்டு பளிங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாரத்தில் ஏழு நாட்களிலும் திறந்திருக்கும் இந்த கோயிலில் வழக்கமான அனைத்து இந்து பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. இக்கோவில் இந்துக்களின் வரலாறும் கலாச்சாரமும் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் மிக பெரிய கோவில்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இக்கோவில், மிக பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட கோவில் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளது.

இக்கோவிலின் தோற்றம் அனைவரும் வியக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதால் லண்டனிற்கு சுற்றுலா செல்லும் அனைவரும் மறக்காமல் இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்பதே பல மக்களின் விருப்பமாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு