செய்தி விவரங்கள்

முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு  வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக கோறளைப் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் கோறளைப்பற்று பிரதேச சபை முன்றலில் இன்று காலை நடைபெற்றது.

கறுவாக்கேணி பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் பிரதேச மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஐக்கிய தேசிய கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக இரண்டு வருடங்களாக தமிழ் மற்றும் முஸ்லிம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையில் பிரச்சினைகள் நடைபெற்றுவருகின்றன.

கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் 15 பேருக்கு முச்சக்கரவண்டி தரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் முஸ்லிம் பகுதியில் தரிப்பிடம் வழங்கப்பட்டிருந்த 6 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்த்து. 

தமிழர்களுக்கு தரிப்பிடம் வழங்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் முஸ்லிம்கள் முச்சக்கரவண்டி சாரதிகள் அத்துமீறி இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவதால் பிரச்சினைகள் எற்பட்டுள்ளன.

முச்சக்கர வண்டி தரிப்பிட பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரியே இந்த இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின்  இறுதியில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு