செய்தி விவரங்கள்

வாழைச்சேனையில் வாகன விபத்து - எகிப்து நாட்டவர் உட்பட மூவர் காயம்!

வாழைச்சேனையில் வாகன விபத்து - எகிப்து நாட்டவர் உட்பட மூவர் காயம்!

வாழைச்சேனை கறுவாக்கேணி பாடசாலை வீதியில் இன்றையதினம்(30-04-2018) திங்கட்கிழமை மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் எகிப்து நாட்டவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

மீராவோடையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும், சுங்கான்கேணியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் பாடசாலை முன்பாக நேருக்கு நேர் மோதியதிலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில் காயமடைந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓட்டமாவடி அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அப்துல் அலீம் ஷலாஹ் (வயது 58) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் காயமடைந்த மீராவோடை ஆர்.சி. வீதி அறபா ஒழுங்கையில் வசிக்கும் எம்.ஏ.எம்.சுந்துஸ் (வயது 25), சுங்காங்கேணி எல்லை வீதியைச் சேர்ந்த சி.ரமேஸ் (வயது 36) ஆகியோர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு