செய்தி விவரங்கள்

தேசிய கட்சிகளுடன் இணையப் போவதில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தேசிய கட்சிகளுடன் இணையப் போவதில்லை

அதேவேளை, கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து ஒரு போதும் செயற்படாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் நீடிக்குமா அல்லது புதிய ஆட்சி ஏற்படுமா என்ற குழப்ப நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ தனித்து ஆட்சியமைப்பதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காது என யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தென் பகுதி அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றமானது புதிய அரசியல் யாப்பு உருவாக்க பணிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டும் பட்சத்தில் அதனுடன் இணைந்து பயணிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை அரசியல் நாகரீகமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு