செய்தி விவரங்கள்

மோசமடைந்துள்ள அரசியல் கைதிகளின் உடல்நிலை:விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அனுராதபுரம் சிறையில் இன்று 18 ஆவது நாளாக உணவு தவிர்ப்பில்  இருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மிகவும் சேர்வடைந்து காணப்படுவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைவ மகா சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சைவ மகா சபை குழுவினர் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்தனர்.

மோசமடைந்துள்ள  அரசியல் கைதிகளின் உடல்நிலை:விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சந்திப்பின் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.....

சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதிகள் தற்போது சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் உடல்நிலை சோர்வடைந்த நிலையில் உள்ளது.அத்துடன் அவர்களுக்கு 15 தொடக்கம் 16 வரையான சேலைன்கள் ஏற்றப்பட்டுள்ளன.

மோசமடைந்துள்ள  அரசியல் கைதிகளின் உடல்நிலை:விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒவ்வொருவரின் உடல் நிறையும் 12 தொடக்கம் 15 கிலோ வரை குறைந்துள்ளது.

இந்நிலை நீடிக்குமாயின் அது அவர்களுக்கு ஆபத்தாக அமையும் எனவும் எனவே  விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாளை அவர்களுக்கு ஆதரவாக இடம்பெறும் கர்த்தாளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர் .

மேற்படிக் குழுவில் தென்கயிலை ஆதீன முதல்வர்  சீடர் சிவத்திரு திருமூல தம்பிரான் சமூக செயற்பாட்டாளர் கோமகன் மற்றும் சிவ தொண்டர்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு