செய்தி விவரங்கள்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்!

இன்று நள்ளிரவு முதல் வைபர்(Viber) இலங்கையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலை­த­ளங்களை, இலங்கை தொலை தொடர்புகள் மற்றும் ஒழுக்­காற்று ஆணைக்­குழு தற்­கா­லி­க­மாக முடக்­கி­யி­ருந்­தது.

72 மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்கு மட்­டுமே இக்­கட்­டுப்­பாடு என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் தொடர்ச்­சி­யாக இவை முடக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இருக்­கின்­றன.

இந்நிலையில் அரச தகவல் திணைக்களம் இன்று ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

இன்று நள்ளிரவு முதல் வைபர் (Viber) இலங்கையில் இயங்கும் எனவும். பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏனைய வலையமைப்புகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு