செய்தி விவரங்கள்

இலங்கை ஜனாதிபதிக்கு நாடாளும் திறன் இல்லையாம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பல தவறுகள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆட்சியிலேற்பட்ட தவறுகளுக்கான இழப்பீட்டினை இதுநாள்வரை மகிந்த ராஜபக்ச செலுத்திவருவதாகம் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட மூவருக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட தவறான செயற்பாடுகள் காரணமாக குறித்த தவறுகள் இடம்பெற்றுள்ளதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு