செய்தி விவரங்கள்

தமிழர் விடுதலை கூட்டணி வசமானது வவுனியா நகரசபை!

தமிழர்  விடுதலை  கூட்டணி  வசமானது  வவுனியா  நகரசபை!

வவுனியா நகரசபையினை தமிழர் விடுதலைக் கூட்டணி தன் வசப்படுத்தியுள்ளதுடன் தலைவராக இ. கௌதமன் தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகரசபையின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்றையதினம்(16-04-2018) வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தலைவருக்கான போட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நா. சேனாதிராஜாவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் நிறுத்தப்பட்டு பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது.

தமிழர்  விடுதலை  கூட்டணி  வசமானது  வவுனியா  நகரசபை!

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட 75 வயதான நா. சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 37 வயதான இ. கௌதமனுக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும், பொது ஜனபெரமுனவின் ஒருவாக்குமாக 11 வாக்குகள் பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உபதலைவருக்கான தெரிவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் க. சந்திரகுலசிங்கமும் சுதந்திரக்கட்சியின் சார்பில் சு. குமாரசாமியும் போட்டியிட்டிருந்தனர்.

தமிழர்  விடுதலை  கூட்டணி  வசமானது  வவுனியா  நகரசபை!

இவர்களில் க. சந்திரகுலசிங்கத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சு. குமாரசாமிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் பெற்று உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிலையில் அனைத்து தெரிவுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடு நிலைவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்  விடுதலை  கூட்டணி  வசமானது  வவுனியா  நகரசபை!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு