செய்தி விவரங்கள்

தொடருந்துப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை !

தொடருந்து உதவியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு,தொடருந்து சாரதிகள் சங்கம் நேற்று  நள்ளிரவு முதல்  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது.

தொடருந்துப்   பணிப்பகிஷ்கரிப்பு  தொடர்பில்    பேச்சுவார்த்தை !

இதுதொடர்பில்,  போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் தொடருந்து தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் இடையில் தற்பொழுது, அமைச்சில்   நடைபெற்று வருகின்றது.

தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள தொடருந்து பணிப்பகிஷ்கரிப்பிற்கு, துரிதமான தீர்வை பெற்றுக்கொடுக்ககூடியதாக அமையும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த பகிஷ்கரிப்பின் காரணமாக பயணிகளின் சிரமங்களை கருத்திற் கொண்டு,  மேலதிக போக்குவரத்துச் சேவைகளை ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு