செய்தி விவரங்கள்

த.தே.கூட்டமைப்பு வசமானது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை!

த.தே.கூட்டமைப்பு வசமானது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை!

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சலீம் தலைமையில் இன்று 16ம் திகதி மாலை 2.30 அளவில் இடம்பெற்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தும் 50 வீதத்திற்கும் அதிகமான ஆசனங்களை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் வென்றேடுக்காத சபைகளில் அமர்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் தெரிவு இடம் பெற்றது.

தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஞானநாயகம் ஞானகுணாளன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இன்னுமொரு உறுப்பினரான கந்தசாமி கோணேஸ்வரன் மற்றும் ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன சார்பில் சந்துன் ரெட்னாயக்க ஆகியோர் பெயா் முன் மொழியப்பட்டு
வாக்களிப்பு இடம் பெற்றது.

த.தே.கூட்டமைப்பு வசமானது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை!

வாக்கெடுப்பிற்கு முன்னர் இரகசிய வாக்கெடுப்பா அல்லது பகிரங்க வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதில் 11 வாக்குகள் பகிரங்க வாக்கெடுப்பிற்கும், 11 வாக்குகள் இரசகிய வாக்கெடுப்பிற்கும் கிடைத்தது.

எனவே இதில் வாக்குச் சீட்டை யார் எடுப்பது என்பதை தீர்மானிக்க சீட்டெடுப்பு இடம் பெற்றது.

இச்சீட்டெடுப்பில் வைத்திய கலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தெரிவு செய்யப்படார்.

அதன் பின்னர் முன்மோழியப்பட்ட மூவருக்கும் இடையே வாக்கெடுப்பு இடம் பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தபால் பெட்டியில் போட்டியிட்டு வென்ற சுயேட்சைக்குழு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியோர் வாக்களித்து 15 வாக்குகள் கிடைத்தது.

ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன சார்பில் சந்துன் ரெட்னாயக்க, ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்களும் சேர்ந்து 07 வாக்குகளும் கிடைத்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்ட்ட கந்தசாமி கோணெஸ்வரநாதன் எந்த வாக்ககளையும் பெறவில்லை. தனது வாக்கையும் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் அவர்களுக்கு வழங்கியிருந்தார்.

த.தே.கூட்டமைப்பு வசமானது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை!

இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தலைவர் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தலைமையில் உப தலைவரின் தெரிவு இடம் பெற்றது.

இதில் சுயேட்சைக்குழு (தபால் பெட்டி) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கைலைநாதன் வைரவநாதன் எவ்வித போட்டியிம் இன்றி முன்மொழியப்பட்டு தெரிவு செய்யப்பட்டார்.

இக் கூட்டத் தொடருக்கு பார்வையாளர்களாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

த.தே.கூட்டமைப்பு வசமானது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு