செய்தி விவரங்கள்

பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்...பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்...பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒகி புயல் காரணமாக கடும் பாதிப்பை சந்தித்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள், மின்கம்பங்கள், என பொதுசொத்துக்கள் சேதத்தை சந்தித்துள்ளன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து கணக்கீடு செய்ய தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான அதிகாரிகள் குமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

இதனிடையே குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.    

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு