செய்தி விவரங்கள்

அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்யும் ரயில்வே உயரதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்யும் ரயில்வே உயரதிகாரிக்கு எதிராக முறைப்பாடு 

கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற படுகொலையை நேரில்கண்ட ஒரேயொரு சாட்சியாளரான சுதேஷ் நந்திமால், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சூழ்ச்சி செய்யும் அரச உயரதிகாரி ஒருவருக்கு எதிராக இரகசிய பொலிஸாரிடத்தில் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.

வெலிக்கடை படுகொலை தொடர்பான வழக்கில் முக்கிய சாட்சியாளரான தன்னை அவ்வழக்கிலிருந்து விலகும்படி அச்சுறுத்திவரும் கும்பலில் குறித்த அரச அதிகாரிக்கும் தொடர்பிருப்பதாவும் சுதேஷ் நந்திமால் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா ரயில்வே திணைக்களத்தின் அதிவேக இயந்திரப் பிரிவு பொறுப்பதிகாரி மடவலகம, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் திணைக்களத்தில் ஊழியர்களை திசை திருப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், ரயில்வே திணைக்களத்தில் பணிபுரிபவரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தில் வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற படுகொலையை நேரில் கண்ட ஒரேயொரு சாட்சியாளருமான சுதேஷ் நந்திமால் சில்வா, கொழும்பிலுள்ள இரகசிய பொலிஸாரிடத்தில் முறைப்பாடு ஒன்றை வழங்கினார்.

ஊழல், மோசடியாளர்கள் மற்றும் கொலைகாரர்களை தண்டனையிலிருந்து பாதுகாப்ப படியினாலேயே ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் படுதோல்வியடையக் காரணம் என்றும் சுதேஷ் நந்திமால் சுட்டிக்காட்டினார்.

அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்யும் ரயில்வே உயரதிகாரிக்கு எதிராக முறைப்பாடு 

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ரயில்வே திணைக்கள அதிவேக இயந்திரப் பிரிவு பொறுப்பதிகாரி மடவலகம உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கடந்த 12ஆம் திகதி வேலைத்தளத்தில் தொழில் நேரத்தில் நிகழ்வொன்றை நடத்தியிருந்தார். 2020ஆம் ஆண்டில் நல்லாட்சியை கவிழ்த்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சிபீடம் ஏற்றவேண்டும். இதற்கு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அவர் ஓர் அரச ஊழியர். கடந்த 15 ஆண்டுகளாக ரயில் சேவை சிறப்பாக வழங்கப்பட்ட போதிலும் கடந்த 3 ஆண்டுகளாக அவ்வாறு வழங்கப்படவில்லை என்று கூறினார். அரச அதிகாரியாக இருக்கின்ற அவர், அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார். வெலிக்கடை படுகொலையை கண்ணால் பார்த்த ஒரேயொரு சாட்சியாளரான எனக்கு, அவ்வழக்கிலிருந்து விலகும்படி பல தடவைகளிலும் அழுத்தம் கொடுத்திருந்தார். இதுகுறித்து நான் தெமட்டகொட பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டிருந்தேன்.

எனது வீட்டின் மீது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடனும் இவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றேன். அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா ரயில்வே திணைக்களத்தில் ஏற்பட்ட வேலைநிறுத்தம், பல பிரச்சினைகளுக்கு இவரே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

கடந்த தேர்தலில் ஊழல், மோசடி, கொலைகாரர்களை நல்லாட்சி பாதுகாத்தத்தினால் தான், நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கம் பாரிய தோல்வியைக் கண்டது. இந்நிலையில் அரச ஊழியராக இருந்துகொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்பவருக்கு எதிராக இன்று முறைப்பாடு செய்கிறேன்” என்றார்.

அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்யும் ரயில்வே உயரதிகாரிக்கு எதிராக முறைப்பாடு 

 

 

 

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு