செய்தி விவரங்கள்

தடுத்து வைக்கப்பட்டள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வேலைநிறுத்தப் போராட்டம்!

ஸ்ரீலங்காவில் தடுத்து வைக்கப்பட்டள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியும்,  புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராமேஸ்வம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 தடுத்து வைக்கப்பட்டள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வேலைநிறுத்தப் போராட்டம்!

வேலைநிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீராவினால் தாக்கல் செய்யப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி தடைசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்ரீலங்கா சிறைகளிலுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியும் ராமேஸ்வம் மீனவர்கள் இன்று புதன்கிழமை  வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது மீனவர்களுக்கு விரோதமாக ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்ட சட்டத்தை மீளப்பெறுமாறு மத்திய அரசு ஸ்ரீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மீன்மிடி தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில் வலியுறுத்தினார்.

 

தமது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தமக்கான தீர்வினை பெற்றுத்தராத பட்சத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் புதுக்கோட்டை தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு மாவட்ட மீனவர்களை ஒருங்கிணைத்து பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதேவேளை கச்சத்தீவு பயணத்திற்கு நாட்டுபடகுகளின் தரம் குறித்து அறிக்கை வெளியிட அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து மீன்துறை உயர் அதிகாரிகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவலாயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய - இலங்கை பக்தர்களின் மத நல்லிணக்கவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் கலந்து கொள்ள 62 விசைபடகுகளில் 2 ஆயிரத்து நூறு பேர் விண்ணபித்துள்ள நிலையில்  கடந்த காலங்களில் பராம்பரியமாக சென்றுவந்த  நாட்டுபடகுகளையும் அனுமதிக்க வேண்டும் என நாட்டுபடகு மீனவர்கள  பல போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 8ஆம் 9ஆம் திகதிகளில் கோரிக்கை மனுகொடுத்திருந்தனர். இதனையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ராமநாதபுரம் ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஜந்து படகுகளுக்கு அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்திருந்தார்

 எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை துணைமுதலமைச்சரை சந்தித்து மீண்டும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் இதனையடுத்து மீன்வளத்தறை இயக்குநரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு